‘ஜடேஜா இந்திய அணிக்கு தேவை தானா?’ ..! சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த சுனில் கவாஸ்கர்!

Sunil Gavaskar about Ravindra Jadeja

டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தற்போது அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இது வரை இந்த தொடரில் இந்திய அணி எந்த ஒரு தோல்வியும் சந்திக்காமல் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், இந்தியா அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இது வரை குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எந்த ஒரு விளையாட்டையும் தற்போது வரை அவர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இந்திய அணியின் ரசிகர்கள் அவரை அணியில் இடம்பெற வைக்க வேண்டாம் என பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், “ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் அவர் சிறந்த அனுபவம் கொண்டவர். இந்த தொடரில் அவருக்கு விளையாட கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளையும் சிறப்பாக அவர் பயன்படுத்தி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கில் அவர் மட்டும் 20 முதல் 30 ரன்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்பதை இங்கு யாரும் மறக்க வேண்டாம். இதனால், ஜடேஜாவின் ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிக்கும் திறனை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது.

அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் பங்களிப்புகள் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். எனவே, ஜடேஜாவின் பங்களிப்பு குறித்து யாரும் சிந்திக்க தேவையில்லை” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்