நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்.!
டெல்லி: 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது. அரசுக்கு எதிராக யாரும் கருத்துக்கள் தெரிவிக்க கூடாது, அரசுக்கு எதிரான செயல்பாடுகள் இருக்க கூடாது என சட்டங்கள் கடுமையாக இருந்தன. இந்த அவசரநிலை 1977, மார்ச் 21 வரையில் அமலில் இருந்தது.
எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தி இன்றோடு 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை வரையில் ஒத்திவைக்கும் நிலை உருவானது.
இதனை அடுத்து, பாஜக எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில், எமெர்ஜென்சி சட்டம் விதித்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆரப்பட்தில் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் என பலரும் கலந்துகொண்டு எமெர்ஜென்சிக்கு எதிராக முழக்கமிட்டனர்.