எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

vijay

விஜய் : மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். 

இன்று டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்ற நிலையில், இந்த ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிய ராகுல் காந்திக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். 

அதனை தொடர்ந்து, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.  இது குறித்து அவர் கூறியதாவது ” மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி அவர்கள்  தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்