500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த யெஸ் பேங்..? இதுதான் காரணம்!!
யெஸ் பேங்: இந்தியாவில் ஐடி நிறுவனம், டெக் நிறுவனம் போன்ற சில துறையில் பணிநீக்கம் செய்வது அரிதானதாக இருந்தாலும் முதல் முறையாக வங்கித்துறையில் கொத்தாக பணிநீக்க அறிவிப்பு வெளியாகி இருப்பதால் இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்திய வங்கிகளின் வலிமையான நிதி ஆதாரத்துடன் இருப்பதை தொடர்ந்து வரும் இந்த வேளையில் தனியார் வங்கியான யெஸ் வங்கி, மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேலான பணியாளர்களை யெஸ் வங்கி பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணியாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வங்கியின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியிலும் யெஸ் வங்கி ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கூட இப்படி பணி நீக்கம் செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த பணிநீக்கத்தைப் பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யெஸ் வங்கியில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும், இதனிடையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் போது யெஸ் வங்கியின் பங்கு 0.42 சதவீதம் அதிகரித்து 24.11 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு தற்போது ரூ.75,580 கோடியாக உயர்ந்துள்ளது.