மின்னல் வேகத்தில் காரில் பறக்கும் அஜித்குமார்! அனல் பறக்கும் வீடியோ!

ajithkumar car

அஜித்குமார் : அஜித் ரசிகர்கள் பலரும் அவர் நடிக்கும் படங்களில் இருந்து எதாவது அப்டேட் வருமா என காத்திருக்கும் நிலையில், அவர் பைக் மற்றும் கார்கள் ஓட்டும் வீடியோக்கள் தான் வெளியாகி கொண்டு இருக்கிறது.  பைக் மற்றும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ள அஜித் அடிக்கடி பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

பைக்கை தொடர்ந்து கார்களை ஒட்டி பார்த்தும் தனது நேரத்தை கழித்துவருகிறார். அந்த வகையில், ஏற்கனவே, துபாய் சென்ற நடிகர் அஜித் அங்கு ரேஸ் டிராக்கில் பிஎம்டபிள்யூ எம் 4 காம்படிஷன் என்ற காரை ஓட்டி பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலாகி வந்தது.

அதனை தொடர்ந்து, ரேஸ் டிராக்கில் பிஎம்டபிள்யூ எம் 4 காம்படிஷன் காரை அஜித் ஒட்டிய வீடியோ ஒன்றும் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் மிரண்டு போய் எப்பா என்னா ஸ்பீடு எனவும், மின்னல் வேகத்தில் பறக்கும் தல எனவும் கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல, இந்த படத்தை தவிர்த்து இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்