அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்..!

Aravind Kejriwal

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 20-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில உயர்நிதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விசாரணை மேற்கொண்டது. அப்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு முதலில் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

மேலும், அப்போது இந்த ஜாமீன் தொடர்பான வழக்கு ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தற்போது உச்சநீதிமன்றம் இதில் தலையிட தேவையில்லை என்று கூறியதுடன் வழக்கையும் வரும் ஜூன் 26-ம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்றைய நாளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கதிர் குமார் ஜெயின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin