ஜிம்மில் அதிர்ச்சி! டிரெட்மில்லில் ஓடும் போது கீழே விழுந்து உயிரிழந்த பெண்!

death

இந்தோனேசியா : ஜிம்மில் பயிற்சிக்காக வந்த  இளம் பெண் ஒருவர் டிரெட்மில் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

22 வயதான பெண், செவ்வாய்கிழமை, மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, டிரெட்மில்லில் ஓடி கொண்டு இருந்த சமயத்தில் நிலை தடுமாறி பின்னாடி ஜன்னலை நோக்கி மெதுவாக சென்றார்.

கீழே விழுவதற்கு முன்பு ஜன்னலை பிடிக்க முயன்ற போதிலும், நிலை தடுமாறிய அந்த பெண் ஜிம் கட்டிடத்தின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் பலத்த காயங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காட்டியது. இறந்த பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் உள்ளூர் அறிக்கைகள் அவருக்கு 22 வயது என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த அந்த பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றிருந்தார், காதலன் இரண்டாவது மாடியில் அவருடன் உடற்பயிற்சி செய்யச் சொன்னார், ஆனால், அந்த பெண்  மேல் மாடியில் உள்ள  டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி சென்ற நிலையில், பரிதாபமாக கீழே விழுந்து  உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்