இறுதி சடங்கு வரை போனவர்.. உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி!

dead or live

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பஷீராபாத் பகுதியில் உள்ள ஒரு குடும்பம், இறந்ததாகக் கருதப்படும் ஒரு நபர் உயிருடன் வீடு திரும்பியபோது அதிர்ந்து போனது.

விகாராபாத் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து, இறந்தவரின் உடைமைகளில், செல்போனை ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர்.

அதனை வைத்து இது நவந்த்கியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் பித்தலா யெல்லப்பா (40) என்பவருடையது என்று நம்பி, சனிக்கிழமை இரவு அவர் உயிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

துக்கமடைந்த குடும்பத்தினர் பிணவறைக்கு சென்று அங்கு விபத்தில் உயிரிழந்த உடலை போலீசார் காட்டினர். பயங்கர விபத்தால் முகம் சிதைந்ததால், எல்லப்பா இறந்துவிட்டதாக  கருதி உடலை கைப்பற்றிய குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அனால், உண்மை என்னெவென்றால் உயிரிழந்தது யெல்லப்பா இல்லை. ஆம், யெல்லப்பாவின் உறவினர் ஒருவர் அவரை தண்டூரில் பார்த்து, இறப்பு செய்தி குறித்தும், இருதி சடங்கு இன்று நடைபெறுவதாகவும் கூறிஉள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த எல்லப்பா, அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தார்.

அதாவது, “எல்லப்பா மூன்று நாட்களாக வெளியூர் சென்று, தண்டூர் ரயில் நிலையத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அவரது தொலைபேசி திருடப்பட்டுள்ளது, அதற்கு மறுநாள் இரவு ரயில் மோதிய விபத்தில் திருடன் உயிரிழந்துள்ளார். இதனை வைத்து இறந்தவர் யெல்லப்பா என்று நினைத்த பொலிஸார், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்னர்.

தற்போது, உயிரிழந்த நபர் எல்லப்பாவின் செல்போனை ரயில் நிலையம் அருகே எங்காவது திருடி இருக்கலாம் அல்லது கண்டுபிடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து அவரது அடையாளத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்