,
Jos Butler Hits 104m six

104 மீ சிக்ஸர்..! சோலார் பேனலை உடைத்த ஜாஸ் பட்லர்!

By

ஜாஸ் பட்லர்: 2024ம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், பி பிரிவில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் களமிறங்கி அமெரிக்கா அணி 115 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனால், 116 என்ற இலக்கை 10.2 ஓவர்களுக்குள் இங்கிலாந்து அணி எட்டினால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம் என தெரிவித்தனர்.

இதனால் தொடக்கம் முதல் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லரும், ஃபிலிப் சாலட்டும் அதிரடியாக விளையாடி வந்தனர். அதில், 3-வது ஓவரை அமெரிக்கா அணியின் இடது கை பவுலரான நேத்ரவல்கர் வீசினார்.

அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட பட்லர் 104 மீ. தொலைவில் ஒரு ஆக்ரோஷமான சிக்ஸர் அடிப்பார். அந்த பந்து பறந்து சென்று மைதானத்தின் கூரை மீது பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனலை சேதமாக்கிவிடும். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், அதனை தொடர்ந்து விளையாடிய இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். அப்போது 9 ஓவரை வீசுவதற்கு சுழற் பந்து வீச்சாளரான ஹாமீத் சிங் வந்தார். அந்த ஓவரை எதிர்கொண்ட பட்லர் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.

அதிலும் ஒரு சிக்ஸரை மைதானத்தின் கூரை மீது நடித்திருப்பார். இந்த சிக்ஸர்கள் மூலம் 38 பந்துக்கு 83 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும், இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரை இறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

Dinasuvadu Media @2023