வந்துட்டாருயா வந்துட்டாரு! மிரட்டல் லுக்கில் லெஜண்ட் அண்ணாச்சி! மிரண்டு போன ரசிகர்கள்!
லெஜண்ட் சரவணன் : ‘அண்ணாச்சி பெயரை கேட்டாலே சும்மா அதிருத்துள்ள’ என்பது போல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். இவருடைய முதல் படமான ‘தி லெஜண்ட் ‘ கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக ஒரு கலக்கு கலக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தான் நடித்த முதல் படத்திலே இந்த அளவுக்கு விமர்சனங்களை சந்தித்து விட்டோம் அடுத்த படத்தில் இது நடக்காமல் இருக்கவேண்டும் நம்மளுடைய நடிப்பை பார்த்து ஆச்சரிய படவேண்டும் என்று யோசித்து லெஜண்ட் சரவணன் கொடி, கருடன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துறை செந்தில் குமாரை அணுகி ஒரு அதிரடியான கதையை கேட்டு அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
இந்த படத்திற்காக தயாராகியுள்ள லெஜண்ட் சரவணன் மிரட்டல் லுக் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அளவுக்கு கையில் துப்பாக்கியுடனும், முரட்டு தனமாகவும் இருக்கிறார். இவருடைய லுக்கை பார்த்தே கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட போகிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும், சிலர் இது நம்ம லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியா? எனவும், அண்ணாச்சி லுக்கே பயங்கரமாக இருக்கு எனவும் கூறி வருகிறார்கள். படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருந்த சூரியை கருடன் படத்தின் மூலம் ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றிய துரை செந்தில் குமார் கண்டிப்பாக லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியையும் ஆக்சன் ஹீரோவாக மாற்ற போகிறார் என படத்தின் லுக்கை வைத்து பார்த்தாலே தெரிகிறது. படம் எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#LegendsNext #NewGameStarted@Dir_dsk@onlynikil pic.twitter.com/nIvJxNDUkl
— Legend Saravanan (@yoursthelegend) June 24, 2024