ரஷ்யா : தேவாலயங்கள் மீது குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்.. 15 பேர் பலி!!
ரஷ்யா : ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தானில் உள்ள ஒரு ஜெப ஆலயம், இரண்டு ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் மற்றும் ஒரு போலீஸ் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தொடர்ச்சியான இந்த பயங்கர தாக்குதல்களில் 15-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெப ஆலயம் மற்றும் தேவாலயம் இரண்டும் டெர்பென்ட்டில் அமைந்துள்ளன. இதனை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில், பொதுமக்கள் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இருப்பினும், மொத்த இறப்பு எண்ணிக்கை ரஷ்ய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. தகவல்களாக, 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து துப்பாக்கிதாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், டெர்பென்ட்டில் இரண்டு பயங்கரவாதிகளும், மகச்சலாவில் மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும், தாகெஸ்தானின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு இந்த தாக்குதல்களை பயங்கரவாத செயல்கள் என சந்தேகப்பட்டு “பயங்கரவாத விசாரணையை” தொடங்கியுள்ளது. ஜெப ஆலயம் தாக்குதலுக்குப் பிறகு தீப்பிடித்தது. ரஷ்யா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி, துப்பாக்கி ஏந்தியவர்கள் தீக்குண்டுகளை பயன்படுத்தி கட்டிடத்தை எரித்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தாகெஸ்தான் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஜி மெலிகோவ் கூறியதாவது “பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் எந்த காரணத்துக்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதனை விசாரித்து வருகிறோம்” என கூறியுள்ளார்.
🚨🇷🇺RUSSIA: GUNMEN ATTACK ORTHODOX TEMPLE AND SYNAGOGUE
Gunmen opened fire on a synagogue and Orthodox Church in Derbent in the Republic of Dagestan, leading to a fire breaking out at the synagogue.
Additionally, a police checkpoint in Makhachkala was targeted by gunfire,… pic.twitter.com/1WpMPy7wRk
— Mario Nawfal (@MarioNawfal) June 23, 2024