பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு காங்கிரஸ் போராட்டம்.!

ஹரியானா : அம்பாலாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர்கள், நடை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சேத்தன் சவுகான் தலைமையில், இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், மாணவர்களை போலீசார் கைது செய்தனர். நாட்டின் கல்வி முறையை அரசால் நடத்த முடியாதபோது, பாஜக அலுவலகத்தையும் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தெரிவித்தார்.
மறுபுறம், ஹரியானாவின் பிவானி பகுதியிலும், யுஜிசி நெட் தேர்வு ஊழல் மற்றும் எச்.சி.எஸ் ஆட்சேர்ப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் நகரில் ஊர்வலமாகச் சென்று, நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!
March 31, 2025