வரட்டா மாமே டுர்ர்…ஆவணத்தை கேட்ட காவலர்…அதிர்ச்சி கொடுத்த ஓட்டுநர்! வைரலாகும் வீடியோ!
ஹரியானா : மாநிலம் பல்லப்கரில் உள்ள சாலையில் கார் ஒன்று வந்து நின்றது. அப்போது, சிக்னல் போட்ட நிலையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த கார் பக்கத்தில் சென்று காரை ஒட்டி வந்த டிரைவரிடம் வாகன ஆவணங்களைக் கேட்டார். இதனால், டிரைவருக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு ஒரு பக்கம் முற்றிப்போக ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் கதவையும் பூட்டாமல், உள்ளே இருந்த காவலரை காருக்குள் வைத்துக்கொண்டே தப்பி செல்ல முயற்சி செய்தார். பின் கொஞ்ச தூரம் சென்று வண்டி நின்ற நிலையில், காரில் இருந்து ஒருவர் கீழே இறங்க மீண்டும் கார் நகர்ந்து சென்றது.
அதைப்போலவே, மற்றோரு முறையும் கார் கொஞ்ச தூரம் தள்ளி சென்று நின்ற நிலையில், மற்றோருவரும் கீழே இறங்கினார். அதன்பிறகு அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் காரை சூழ்ந்தார்கள். கூடவே இருந்த மற்றோரு காவல்துறையினரும் காரை பார்த்து ஓடிக்கொண்டு உள்ளே இருந்த காவலரை வெளியே இழுத்தார்.
பிறகு மீண்டும் அந்த டிரைவர் தப்பித்து விட கூடாது என்பதால் காரின் சாவியையும் பிடிங்கிவிட்டு காவலர் வண்டி ஓட்டி வந்த டிரைவரின் சட்டையை பிடித்து வெளியே கொண்டு வந்தார். இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூடி பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கிருந்த காவலர்கள் நகர்ந்து செல்லுங்கள்…நகர்ந்து செல்லுங்கள்… என கூறி சென்றார்கள். பின் அந்த டிரைவரை விசாரணைக்காகவும் அழைத்து சென்றார்கள்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குறுக்கே வந்த என்ன ஆகி இருக்கும்? எனவும், காருக்குள் காவலர் இருந்து அவரை கண்டுக்காமல் திறந்த கதவுடன் காரில் தப்பிக்க முயன்ற டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.
Ballabgarh, Faridabad: When the traffic signal turned red, an Inspector of Traffic Police requested vehicle documents from a driver, sparking a dispute between them. Subsequently, the driver accelerated, dragging the traffic policeman at high speed pic.twitter.com/LsY32fsGJL
— IANS (@ians_india) June 22, 2024