Former ISRO Chairman Radhakrishnan

தேர்வு முறைகேடு : 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை அமைத்தது மத்திய அரசு!

By

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. இதன் எதிரொலியாக தற்போது மத்திய அரசு 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.

தேசிய தேர்வு முகாமை மேம்படுத்துவது மற்றும் அது நடத்தும் தேர்வுகளை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது குறித்தும் ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு தற்போது குழு ஓன்றை அமைத்து உள்ளது.

நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேசிய தேர்வு முகமை (NTA) கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, நெட் தேர்வானது (NET) முறைகேடு புகார் காரணமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

என்டிஏ அமைப்பு விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படும் எனவும் அதனை மேம்பபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது, என்டிஏ நடத்தும் தேர்வுகளை ஆராய இஸ்ரோ முன்னாள் தலைவரான ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

தேர்வு செயல்முறையின் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளில் முன்னேற்றம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை குறித்த பரிந்துரைகளை இந்த குழு 2 மாதங்களுக்குள் கல்வி அமைச்சகத்திடம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023