ஓடும் ஆம்னி வேனில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகள் – பதறவைக்கும் காட்சி.!

School Van

குஜராத் : ஓடும் பள்ளி வேனில் இருந்து இரண்டு பள்ளி மாணவிகள், திடீரென கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த திகிலூட்டும் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஒரு வெள்ளை நிற ஆம்னி வேனில், ஒரு சிறிய தெரு வழியாக செல்வதைக் காட்டுகிறது. வேகமாக செல்லும் அந்த ஆம்னி வேனின் பின் வழி டோர் எதிர்பாராத விதமாக ஓபன் ஆகி இரு மாணவிகள் நடு ரோட்டில் விழுந்து, கை மற்றும் கால்களில் அடி விழுந்திடவும் கதற தொடங்கினர்.

பின்னர், மாணவிகள் கூச்சிலிட தொடங்கியதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவிகளை தூக்கி விடவும், சிலர் அந்த வேனின் ஓட்டுநரை திட்டவும் செய்கிறார்கள். மனதை பதறவைக்கும் இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பியது. பல ஊடக  பயனர்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

ஓட்டுநரின் கவனக்குறைவால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் வேன் கதவை சரியாக மூடாததால், மாணவிகள் வெளியே விழுந்தனர். இதனால், மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
RIP Syed Adil Hussain Shah - PAHALGAM Attack
pahalgam ipl bcci
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit