நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்.!

Thalapathy Vijay HBD

விஜய் பிறந்தநாள் : திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறுசு முதல் பெருசு வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக,இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள விஜய் தான் இன்றும் டாப் என்றே சொல்லலாம்.

பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர். நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “THE GOAT” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் ஷார்ட்ஸ் வீடியோவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் முதல் அவருடன் நடித்த நடிகர்களும், இதற்கு முன்னதாக அவருடன் பணியாற்றிய பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தை தொடர்ந்து, தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலாக, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், இந்த சோகமான நேரத்தில் கொண்டாடுவதைத் தவிர்க்கவும் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்….

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்