‘இந்திய மாணவர்களுக்கு க்ரீன் கார்டு’! டிரம்ப் பேச்சால் அதிர்ந்த அமெரிக்கா!

Donald Trump

டொனால்ட் டிரம்ப்: இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான களம் நாளுக்கு நாள் சூடு பிடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஒரு முனையில் அதிபர் ஜோ ஃபைடனும், மறுமுனையில் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் என அமெரிக்கா பொதுத்தேர்தலுக்கான பேச்சுகள் அனல் பறக்கிறது என்றே கூறலாம்.

இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்ப் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அவர் பேசியதை கேட்டு ஒட்டு மொத்த அமெரிக்கா மக்களையும், குறிப்பாக அங்கு பயின்று வரும் இந்திய மாணவர்களையும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை குறித்தது அவர் கூறியதாவது, “நீங்கள் இங்கு ஒரு கல்லூரியில் பட்டம் பெறுகிறீர்கள் என்றால் உங்கள் பயின்ற அந்த டிகிரியின் ஒரு பகுதியாக நீங்கள் ஆட்டோமேட்டிங் முறையில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற கிரீன் கார்டைப் பெறுவீர்கள்.

இது ஜூனியர் கல்லூரிகளும் அடங்கும், பட்டதாரிகளான எவரும் ஒரு கல்லூரிக்கு 2 வருடங்கள் முதல் 4 வருடங்கள் செல்கிறார்கள் என்றால் அவர்கள் விரும்பினால் கட்டாயமாக கிரீன் கார்டு வழங்கப்படும்.

நான் அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இதை முதல் நாளிலேயே அமலாக்கம் செய்வேன்” என்று கூறினார். ஏற்கனவே அமெரிக்காவில் வெளிநாட்டவர்களில்  அதிகப்படியானவர்கள்  இந்தியர்களாக தான் இருக்கின்றனர்.

அதே போல் அமெரிக்க கல்லூரிகளில் இருக்கும் அதிக மாணவர்களில், வெளிநாட்டவர்கள் பட்டியலில் பார்க்கும் போது இந்தியர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.  இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் சொல்வதை மட்டும் செய்துவிட்டால், இதன் மூலம் அதிகம் பலன் அடைவது இந்தியாவும், இந்தியர்களுமாகத் தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்