பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் … உதவி பண்ணுங்க..! தவெக தலைவர் விஜய் உத்தரவு..!
விஜய்: தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக, புஸ்ஸி ஆனந்த் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. மேலும், சிகிச்சை பெற்று வருவோர்கள் உயிரிழந்து கொண்டே வருவது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதற்கு அரசின் அலட்சியமே கரணம் என்று தவெக தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
அதன் பின், நேற்று மாலை பொழுதில் விஜய் கள்ளக்குறிச்சி சென்று அங்கு சிகிச்சை பெற்று வருவோர்களை நேரில் கண்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார். மேலும், நாளை (ஜூன்-22) விஜயின் 50-வது பிறந்தநாளானது தமிழகம், கேரளா போன்ற இடங்களில் கோலாகலமாக கொண்டாட பட இருந்தது.
வருடம் தோறும் விஜயின் பிறந்தநாள் அன்று, விஜய்யின் பழைய திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்து, திரையரங்குகளில் கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பது வழக்கமாகும். இந்நிலையில், நாளை அவரது 50-வது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட இருந்தது.
தற்போது, தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் அவர்கள் அவரது X தளத்தில், கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், “தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் @actorvijay அவர்கள் உத்தரவு!
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து @tvkvijayhq…
— N Anand (@BussyAnand) June 21, 2024