நயன்தாரா லெவலுக்கு சம்பளம் வாங்கும் ஜான்வி கபூர்! மிரள வைக்கும் சொத்து மதிப்பு!

Janhvi Kapoor

ஜான்வி கபூர் : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்துகொண்டு இருப்பவர் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீ தேவி – தயாரிப்பாளர் போனிகபூர் இருவருடைய மகள் என்பது பலருக்கும் தெரியும். 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர் 6 வருடங்களில் 11 படங்களில் நடித்துள்ளார்.

ஜான்வியின் அடுத்த பெரிய பட்ஜெட் படமான தேவாராவில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார். ஒரு பக்கம் தொடர்ச்சியாக படங்களில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது கார்கள் மற்றும் இடங்களையும் வாங்கி கொண்டு வருகிறார். அவர் வசிக்கும் வீட்டின் விலை கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசும்பொருளாகி இருந்தது.

அதாவது, ஜான்வி கபூர் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்லில் வசித்து வருகிறார். தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷி கபூர் ஆகியோரும் இங்கு வசிக்கின்றனர். இந்த சொகுசு வீட்டை ஜான்வியும் அவரது சகோதரியும் வாங்கினர். இந்த வீட்டை வாங்க ஜான்வி 65 கோடி செலவு செய்துள்ளார்.

இதனை தவிர்த்து, மெர்சிடிஸ் மேபேக், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, லெக்ஸஸ் எல்எக்ஸ் 570, பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் மெர்சிடிஸ் ஜிஎல்இ 250டி போன்ற கார்களையும் கொண்டுள்ளது. ஜான்வியிடம் ஒரு கோடி மதிப்புள்ள வேனிட்டி வேனும் உள்ளது. இப்படி ஆடம்பரமாக இருக்கும் ஜான்வி கபூர் குறுகிய காலத்திலே கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உயர்ந்துள்ளார்.

Janhvi Kapoor
Janhvi Kapoor [file image]
அதாவது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் நயன்தாரா பெயர் தான் பெரிய அளவில் பேசப்படும். அவர் ஒரு படத்தில் நடிக்க 10 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியும் இருந்தது. ஜான்வி கபூரும் அவருக்கு இணையாக ஒரு படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் கேட்கிறாம். ராம்சரணுடன் நடிக்கும் அடுத்த படத்திற்கு 10 கோடி வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோடிக்கணக்கில் வீடு, கோடிகளில் சம்பளம் என வாழும் ஜான்வி கபூர் சொத்துமதிப்பு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி , ஜான்வி கபூர் சொத்து மதிப்பு 82 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் எம்மாடி ஜான்வி கபூருக்கு இவ்வளவு கோடி சொத்து மதிப்பா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Srivaikundam Staion Master Jawber Ali - Dec 2023 Sendur Express Train
mor kali (1)
blood increase (1)
TN Deputy CM Udhayanidhi - World Carrom Champion M Khazima - (L-R) K Nagajothi -V Mithra - A Maria Irudayam - M Khazima
PM Modi
MK Stalin - Amithsha