கோப்பா அமெரிக்கா 2024: அர்ஜென்டினாவுக்கு முதல் வெற்றி ..! 2-0 என கனடாவை வீழ்த்தி அபாரம்!
கோப்பா அமெரிக்கா: 2 வருடங்களுக்கு பிறகு இன்று கோப்பா அமெரிக்கா தொடரானது தொடங்கப்பட்டது, அதில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது.
இந்த ஆண்டில் இன்று தொடங்கி இருக்கும் பெரிதும் எதிர்பார்த்த கால்பந்து தொடர் தான் கோப்பா அமெரிக்கா. இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று ‘A’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது.
நடைபெற இருக்கும் கோப்பா அமெரிக்கா தொடரில் நான் விளையாடுவேன் என சமீபத்தில் மெஸ்ஸி அளித்த ஒரு பேட்டியால் பல எதிர்ப்பார்புகளுடன், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இந்த போட்டியில் மெஸ்ஸி விளையாடுவாரா? என்று எதிர்பார்த்து இருந்தனர்.
மேலும், நடைபெற்ற இந்த போட்டியில் மெஸ்ஸி விளையாடவும் செய்தார். விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் பக்கம் ஒரு தலையாகவே சென்றது. இருப்பினும் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி சில கோல்களை தவறவிடவும் செய்தனர்.
அதே நேரம் கனடா அணியும் கடுமையாக முயற்ச்சித்து பார்த்தும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் 0-0 என சமநிலையில் போட்டியானது நின்றது. அப்படியே இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் முதல் கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கி வைப்பார்.
அதன் பின் ஆட்டத்தின் 88-வது நேரத்தில் லாடரோ மார்டினெஸ் 2-வது கோலை அடிப்பார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என கனடாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா 2024 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.