வார இறுதியில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (21-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.40 பைசா உயர்ந்து ரூ.98.50-க்கும் கிலோவுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.98,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (20-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,600க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.6,700க்கும் விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.10க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025