பெட்ரோல் விலை உயர்வு: நேரடியாக களத்தில் இறங்கிய புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை வழக்கமாக நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விலையுயர்வு குறித்தும், அதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
உள்ளூர் சேவை வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதிலும் சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. இதனால் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.
இதற்கு தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநில கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, நாளை 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பில்லை எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து இன்று காலை பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விலையுயர்வு குறித்தும் அதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
DINASUVADU