Connect with us

அமெரிக்காவை பந்தாடிய தென்னாபிரிக்கா ..!18 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றி!

USAvSA , Super 8

கிரிக்கெட்

அமெரிக்காவை பந்தாடிய தென்னாபிரிக்கா ..!18 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றி!

 சூப்பர் 8: டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியானது இன்று தொடங்கியது. அந்த போட்டியில் அமெரிக்கா அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியது.

நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 8  சுற்றானது தொடங்கியிருக்கிறது. அதில் இன்றைய போட்டியாக அமெரிக்கா அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்து, தென்னாபிரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி அதிரடியாக தங்களது பேட்டிங்கை தொடங்கியது.

அதிலும், முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்தாலும் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரமும், டி காக்கும் அதிரடியில் பட்டையை கிளப்பினார்கள். இதனால், தென்னாபிரிக்கா அணியின் ஸ்கோரானது உச்சத்தை நோக்கி நகர்ந்தது.  அதன்பின் இருவரும் ஆட்டமிழந்ததன் காரணமாக சற்று ரன்கள் குறைந்தது.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் தேவையான பவுண்டரிகள் அடித்து போட்டியை கட்டுக்குள் வைத்திருந்தனர். இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்தது. அதிலும், டி காக் அதிகபட்சமாக 40 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதன்பின் இமாலய இலக்கை அடிக்க களமிறங்கிய அமெரிக்க அணி, தொடக்கத்தில் அதிரடி காட்டி ரன்களை குவித்தனர். இதனால், ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் பறந்தது. ஆனால், அதன் பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்து அமெரிக்க அணி சரிவை காண தொடங்கியது.

இதனால் 76-5 என தடுமாறியது அமெரிக்கா அணி, அங்கிருந்து ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஹர்மீத் சிங் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். இதனால், சரிவிலிருந்து அமெரிக்கா அணி மெதுவாக மீண்டு வந்தது. அடித்து விளையாடி கொண்டிருந்த ஹர்மீத் சிங் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதி வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது.  அந்த ஓவரை வீசிய நோர்கியா சிறப்பாக வீசி வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் அமெரிக்கா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்களை எடுத்தது. அமெரிக்கா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கௌஸ் 80* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி அமெரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Continue Reading

More in கிரிக்கெட்

To Top