அதிர்ச்சி… சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் மேலாளர் தற்கொலை.!
பெங்களூரு : பெங்களூரில் உள்ள கன்னட நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் அவரது மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகரும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான தர்ஷன் சிறையில் உள்ள நிலையில், அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷனின் பண்ணை வீட்டில் ஸ்ரீதரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தில் உள்ளதால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். தனது குடும்பத்தினர் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீதரின் தற்கொலைக்கும், தர்ஷன் மற்றும் அவரது கும்பலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், ரேணுகாசாமியின் கொலை வழக்குக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என போலீஸார் தேடி வருகின்றனர்.
அதன்படி, பெங்களூரு போலீசார் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 9 அன்று கொலை செய்யப்பட்ட 33 வயதான ரேணுகாசுவாமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது தலை, வயிறு மற்றும் மார்புப் பகுதி உட்பட அவரது உடல் முழுவதும் 15 கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.