ஒரே பைக்கில் 7 பேர்! வைரலான வீடியோவை பார்த்து அபராதம் விதித்த போலீசார்!
உத்தரபிரதேசம் : ஹபூரில் 7 பேருடன் பைக்கில் சென்றவருக்கு காவல்துறையினர் 9,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. குற்றச் செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துக்கொண்டும் வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலான நிலையில்,காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துள்ளனர்.
பைக்கில் இடமே இல்லாத நிலையில், அந்த நபர் சிறிய குழந்தையை தனது கழுத்திற்கு மேல் வைத்து கொண்டு பைக்கில் சென்றார். கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று கூட யோசிக்காமல் போய்க்கொண்டு இருந்த நிலையில், வீடியோவை பார்த்த பலரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாகனம் ஓட்டுபவரை கைது செய்யவேண்டும் எனவும் கூறினார்கள்.
இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில், வீடியோ ஹபூரின் சிம்பவாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரோடா தரியாபூர் கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்டது தெரிய வந்தது. பைக்கின் எண் வைத்து வாகனத்தை வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்து ரூ.9500 அபராதம் விதித்தது.
जनपद हापुड़ में एक बाइक पर क्षमता से अधिक सवारी बिठाकर चलने का वीडियो सोशल मीडिया पर वायरल हुआ, जिसका यातायात पुलिस द्वारा तत्काल संज्ञान लेते हुए उक्त बाइक का (कुल 9,500/- रुपये) का चालान किया गया।
.@Uppolice pic.twitter.com/GK2fFa0aTu— HAPUR POLICE (@hapurpolice) June 18, 2024
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து காவல் அதிகாரி ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், “7 பேர் பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் நாங்கள் பார்த்தோம். இந்த வீடியோ ஹபூரின் சிம்போலி காவல் நிலையத்தின் ஹரோரா சாலையில் இருந்து வந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.9500 கட்டணமாக போட்டுளோம். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளுக்கு முரணான எதையும் செய்ய வேண்டாம்” எனவும் கூறியுள்ளார்.