இடைத்தேர்தலில் மு.க.அழகிரி …!மிகப்பெரிய கூட்டத்தை கூட்டிய அழகிரி…!வாயை பிளக்கும் அதிமுக அமைச்சர்
அமைச்சர் செல்லூர் ராஜூ அழகிரி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது.
இந்நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அழகிரி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பல வருடங்களாக பதவியில் இல்லாமல் இருந்தாலும், மிகப்பெரிய கூட்டத்தை அழகிரி கூட்டியுள்ளார்.ஆனால் இடைத்தேர்தல் வரும் போது அழகிரிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பது தெரியவரும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.