1,100 கிலோ பிரமாண்ட வில் – அம்பு.! அயோத்தி ராமர் கோயிலுக்கு அன்பு பரிசு.!

Ram Mandir Bow Arrow

அயோத்தி: ராமர் கோயிலுக்கு 1,100 கிலோ எடையுள்ள வில், அம்பு மற்றும் தண்டாயுதம் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருட தொடக்கத்தில் உத்திர பிரதேசம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இருந்தே கடவுள் ராமருக்கு பல்வேறு பகுதியில் இருந்து நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக ராமர் கோயில் திறப்பு நிகழ்வு சமயத்தில் 2.5 கிலோ எடையில் தங்கத்தில் வில் அம்பு பரிசாக வழங்கப்பட்டது., ஆந்திராவில் இருந்து வெள்ளியிலான 13 கிலோ எடையுள்ள வில் அம்பு பரிசாக வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, தற்போது ராம் மந்திர் அறக்கட்டளை சார்பாக 1100 கிலோ எடையுள்ள பிரமாண்ட வில் அம்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வில் அம்புவானது கடந்த ஞாயிறு அன்று கரசேவக் புரம் பகுதியில் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து சாலை மார்க்கமாக வில் அம்பு ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்