வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி!

Jagan Mohan Reddy

ஆந்திரப் பிரதேசம் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பற்றிய பரபரப்பான விவாதத்திற்கு மத்தியில், தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘எக்ஸ்’ தளத்தின் உரிமையாளரும் டெஸ்லா சிஇஓவுமான, எலோன் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது AI மூலம் ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது என்று ட்வீட் செய்திருந்தார்.

இவ்வாறு, எலோன் மஸ்க் EVM-களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து தெரிவித்திருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மஸ்கின் கருத்துக்களைப் பார்த்து, EVMகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.

அந்த வகையில், இன்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில்,”ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன, வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வுகளை நிலைநாட்ட நாமும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், EVM வாக்குப்பதிவு முறையில் வலுவான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பாதுகாப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்