மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரிப்பு – ராகுல் காந்தி காட்டம்!

modi

மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரிப்பு என ராகுல் காந்தி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும்,  30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நின்று கொண்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

Train Accident
Train Accident [file image]
இந்த விபத்து சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி இரங்கலை தெரிவித்ததோடு மோடிக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இரங்கல் : 

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கண்டனம் : 

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில் விபத்துகள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் புறக்கணிப்பின் நேரடி விளைவாகும், இதனால் ஒவ்வொரு நாளும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்படுகின்றன.

Train Accident - Prime Minister
Train Accident – Prime Minister [file image]
இன்றைய விபத்து இந்த உண்மைக்கு இன்னுமொரு உதாரணம் -பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த பயங்கரமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம்” என கண்டனத்தையும் ராகுல் காந்தி பதிவு செய்து இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining
Annamalai - Edappadi palanisamy
TRISHA CRY