விராட் கோலியே ஒழுங்கா ரன் எடுக்கல.. பாகிஸ்தானை குறை சொல்லாதீங்க! கடுப்பான பயிற்சியாளர்!

t20 world cup 2024 pakistan virat

டி20 உலகக்கோப்பை : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகாணங்களில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில், இது பற்றி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரஷீத் லத்தீப் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது எங்களுக்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது.

அதற்காக எல்லா விஷயங்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களைக் குறை கூற முடியாது. என்னை பொறுத்தவரை வீரர்கள் அனைவரும் நன்றாக தங்களால் முடிந்த அளவுக்கு போராடினார்கள்.ஆனால், விளையாடிய ஆடுகளத்தின் நிலைமைகளால் தான் தடுமாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் இந்தியா இரண்டு அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். போட்டியின் நிலை வேறு மாதிரி மாறிவிட்டது.

இது அனைத்திற்கும் காரணமே ஆடுகளத்தின் நிலைமை என்று மட்டும் தான் நான் கூறுவேன். விராட் கோலி  பெரிய அளவில் ரன்களை எடுக்கவில்லை. விராட் கோலி மட்டுமில்லை அவரை போன்ற ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ரன்களை எடுக்கவில்லை. அதைப்போல, இந்த உலகக்கோப்பையில் தனி நபர் அரை சதங்கள் அதிகம் இல்லை. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக எந்த அணியும் அரை சதம் கூட அடிக்கவில்லை. ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அடித்தால் அணி அடிக்கடி வெற்றி பெறுகிறது. ரிஷப் பந்த் 42 ரன்கள் எடுத்தார், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது” எனவும் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

ஏற்கனவே, இந்த சீசனில் விராட் கோலி இதுவரை சரியாக விளையாடவில்லை அவர் மிகவும் மோசமான பார்மில் இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கும் சூழலில் ரஷீத் லத்தீப் விராட் கோலியே ஒழுங்கா விளையாடவில்லை என கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்