இந்த மேட்சும் அவ்ளோதான் ..! 2-வது நாளாக கைவிட படும் டி20 போட்டி!!
டி20I: இன்று நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பையை தொடரின் லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 33-வது போட்டியாக இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியானது புளோரிடா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது, தற்போது மோசமான வானிலையின் காரணமாகவும் மழை பொழிவு காரணமாகவும் கைவிடப்பட்டுள்ளது.
இதே மைதானத்தில் தான் நேற்று நடைபெற இருந்த அமெரிக்கா – அயர்லாந்து போட்டியும் மழையின் காரணமாக கைவிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 2 அணிகளுக்கும் ஏதேனும் பாதிப்பா? என்று கேட்டால், எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்திய அணி ஏற்கனவே அடுத்து சுற்றான சூப்பர் -8 சுற்றுக்கு முன்னேறியேது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் ஜூன்-20 ம் தேதி இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் சூப்பர் 8 சுற்றின் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் அமெரிக்கா அணியும் வருகிற ஜூன்-21ம் தேதி அன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தங்களது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியை விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.