கோவையில் திமுகவின் முப்பெரும் விழா தொடங்கியது.!
கோவை : பீளமேடு கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இந்தியாக் கூட்டணிக்கு 40க்கு 40 எனும் மகத்தான வெற்றி மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க துணைநின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது.
அதைப்போல, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி போல, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் இடம்தான் இந்த கோவை முப்பெரும் விழா. இந்த விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இருக்கும் நிலையில், சிறப்பு உரையாற்றவுள்ளார்.
மேலும், முப்பெரும் விழாவில் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து இன்று காலை கோவை வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியை தேடி தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கோலாகலமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது விழா கோலாகலமாக தொடங்கி இருக்கிறது.