பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைப்பு.! ஏன் தெரியுமா?

Pakistan - petrol price

பாகிஸ்தான் : பணவசதி இல்லாத பாகிஸ்தானில் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈத் உல் அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்பட்டு ரூ.258.16 ஆகவும், அதிவேக டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.33 என குறைக்கப்பட்டு ரூ.267.89 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (ஓக்ரா) நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் எரிபொருள் விலையை மதிப்பாய்வு செய்யும் நிதிப் பிரிவு, சமீபத்திய விலைக் குறைப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த 15  நாட்களுக்கு இந்த புதிய விலைகள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்