‘வருமான வரியை ஒழிப்பேன்’ – அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வாக்குறுதி..!!
டொனால்ட் ட்ரம்ப்: இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெரும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் அமெரிக்க மக்கள் மீது சில வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கா மக்களை வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின், வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கேபிடல் ஹில் கிளப்பில் கடந்த வியாழன் அன்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், டொனால்ட் ட்ரம்ப் இந்த வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார். மேலும், கார்ப்பரேட் வரி விகிதத்தை 35% சதவீதத்திலிருந்து 21% சதவீதமாக குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனை அடுத்த ஆண்டு அமல்படுத்துவதாகவும், பல வரிச் சலுகைகளை நிரந்தரமாக ரத்து செய்வதாகவும் கூறியிருக்கிறார். கடந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதிவியில் இருந்த போது, வெளியுறவுக் கொள்கையில் பன்முக ஆயுதமாக கட்டணங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அமல்படுத்தினால், பொருட்களின் விலைவாசி என்பது ஏறிவிடும் எனவும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது எனவும், இதனால் பணக்காரர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விடும் எனவும் காரணம் கூறி பல தரப்பில் இருந்து இதற்கு கண்டனம் எழுந்துள்ளது.