உத்தராகண்ட் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! 8 பேர் பலி!!

Rudraprayag van Accident

உத்தராகண்ட் : மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேன் சென்று கொண்டு இருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வட்டாரம் தகவலை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

மேலும். இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து (SDRF) அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது “வேன் காஜியாபாத்திலிருந்து சோப்தாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும்,  இரவு 11.30 மணியளவில் விபத்து நடந்ததாகவும் கூறினார். முதற்கட்டமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்துக்குள்ளானதாகவும்” தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி,  மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)