ஆண்ட்ராய்டாக மாறும் ஆப்பிள்? அம்சங்களை காப்பி அடித்த ஆப்பிள் ..என்னென்ன தெரியுமா?
ஆப்பிள் iOS 18: 2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல் இருந்து காப்பி அடித்துள்ளனர் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் கூறி வருகின்றனர்.
ஆப்பிள் வருடந்தோறும், ஒவ்வொரு மொபைலை களமிறக்கும் போதும் அதில் வித்தியாசமான அம்சங்களுடன் வெளியாவது உண்டு. அது எல்லாம் , ஆண்ட்ராய்டிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருக்கும். ஆப்பிளில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றை ஆண்ட்ராய்டு காப்பி அடிக்க தொடங்கினார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்பிள் தனது மொபைலுடன் கூடிய சார்ஜரை கொடுக்கமல் அதை தனியே விற்பனை செய்து தொடங்கி வைத்தனர். அதை அதன் பிறகு ஆண்ட்ராய்டு பின்தொடர்ந்தனர்.
இப்படி இருக்கையில், ஆப்பிள் புதிதாய் களமிறக்கிய iOS 18 மொபைலில் பல அம்சங்களை அண்ட்ராய்டுலிருந்து காப்பி அடித்துள்ளதாக பல பயனர்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். அதை குறித்து தற்போது பார்ப்போம்.
ஹோம் ஸ்க்ரீனில் ஆப் ஐகான்கள் (Free App Icon Arrangement on the Home Screen):
நம் ஆண்ட்ராய்டு மொபைலின் ஹோம் ஸ்க்ரீனில் நமக்கு தேவையான, நாம் அடிக்கடி செல்ல கூடிய ஆப்களை நம் தேவைக்கு ஏற்ப வைத்துக்கொள்ளலாம். இது அம்சமானது முதலில் ஆப்பிள் மொபைல் களில் இல்லாமல் இருந்தது. ஆனால், இதை அப்படியே iOS 18இல் காப்பி அடித்து வைத்துள்ளனர்.
ஐகான் வண்ணங்கள் (Custom App Icon Colors)
இந்த அம்சமானது பல ஆண்டுகளாக, ஆண்ட்ராய்டு மொபைல்களில் இருந்து வருகிறது என்றே கூறலாம். அதாவது நமக்கு பிடித்த சில ஆப்களுக்கு நாம் நமக்கு பிடித்த வண்ணத்தில் அந்த ஆப்பின் ஐகானை மாற்றி வைத்து கொள்ளலாம்.
தற்போது இந்த அம்சத்தையும் iOS 18இல் வைத்துள்ளனர். அதிலும், இதனை பயன்படுத்தும் போது சில எரர்களும் (Bug) வருவதாகவும் பயனர்கள் கூறி வருகின்றனர்.
RCS செய்தியிடல் (RCS Messaging)
RCS (ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ்) என்பது மொபைல் தகவல்தொடர்பு நெறிமுறையாகும், இது ஃபைல்களை பகிரவும், வீடியோக்களை பகிரவும் பயன்படும் வாட்ஸ்அப் போன்ற ஒரு தளமாகும். மேலும், பாதுகாப்பான செய்திகளை கணிசமாக பகிர்வதற்கு பயன்படுகிறது.
இதை முதன் முதலில் ஆண்ட்ராய்டு 5 தொடங்கி வைத்தனர். இதனை சற்று மாற்றியமைத்து தற்போது iOS 18இல் கொண்டுவந்துள்ளனர்.
ஆப் லாக் (App Lock) & ஹைடிங் ஆப் (Hidding App) :
ஆப் லாக்கை பற்றி நம் எல்லாருக்குமே தெரியும், நமக்கு பிடித்த அல்லது நமது ரகசியங்களை மற்றவர்களிடமிருந்து ஒளித்து வைப்பதற்கு பயன்படும் ஒரு சூப்பர் அம்சமாகும். இதில் விரல் ரேகை மற்றும் முக அடையாளத்தை வைத்து லாக் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆப்பிள்லில் தற்போது களமிறங்கியுள்ளனர்.
அதாவது முக அடையாளமான, ஃபேஸ் ஐடி அம்சத்தை இந்த iOS 18இல் கொண்டுவந்துள்ளனர். அதே நேரம் நமக்கு பிடித்த ஆப்பை மறைத்து வைக்கும் அம்சத்தையும் இதனுடன் இணைத்து வெளியிட்டுள்ளனர்.
கஷ்டம் லாக் ஸ்க்ரீன் ஷார்ட்கட்ஸ் (Custom Lock Screen Shortcuts)
கஷ்டம் லாக் ஸ்க்ரீன் ஷார்ட்கட்ஸ் என்றால் நம் விருப்பத்திற்கு ஏற்ப நம்மால் நமது ஆண்ட்ராய்டு போனின் லாக் செய்திருக்கும் ஸ்க்ரீனில், நமக்கு தேவையான சில ஷார்ட்கட் ஆப்பையோ அல்லது அலாரம் போன்ற அம்சங்களையோ வைத்துக்கொள்ளலாம்.
இது ஆண்ட்ராய்டு 14இல் வெளியான ஒரு அம்சமாகும் அதனை தற்போது வெளிவந்துள்ள இந்த iOS 18இல் புதிய அம்சமென கொண்டுவந்துள்ளனர்.
பாஸ்வர்ட் மேனஜர் (Password Manager)
பாஸ்வர்ட் மேனஜர் என்பது உங்கள் பாஸ்வர்ட் (கடவு சொல்) அனைத்தையும் ஒரே இடத்தில் சேமிக்கும் பயனுள்ள பயன்பாட்டு அம்சமாகும். நீங்கள் உள்நுழையும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் இணையதளத்திற்கும் மிகவும் சிக்கலான மற்றும் தனித்துவமான நீங்கள் உபயோகித்திருக்கும் பாஸ்வர்ட் அனைத்தையும் உங்களால் அதில் பார்த்து கொள்ள முடியும்.
இந்த அம்சம் கொண்டுவந்தது ஆப்பிள் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இதுவும் ஆண்ட்ராய்டின் ஒரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
AI புகைப்பட எடிட்டிங் (AI Photo Editing)
இப்போது நம் கவனத்தை ஈர்ப்பதற்காகவே Apple Intelligence எனும் AI எடிட்டிங்கை என கொண்டு வந்துள்ளனர். நாம் எடுக்கும் புகைப்படங்களோ அல்லது இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் புகைப்படத்தையோ இதில் எடிட்டிங் செய்து கொள்ளலாம்.
என்னதான் AI எடிட்டிங்கை என கொண்டு வந்தாலும், இது சாம்சங் ஆப்ஜெக்ட் எரேசர் மற்றும் கூகுள் மேஜிக் எடிட்டரைப் போலவே செயல்படுகிறது என்று சாம்சங் பயன்படுத்தும் பயனர்கள் கூறி வருகின்றனர்.