வலிகளை உணர வைத்த ‘நான் கோமாளி’! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்!

black sheep naan komali season 3

நான் கோமாளி : பிரபல ஓடிடி தளமான பிளாக் ஷீப்பில் (Blacksheep Value) ‘நான் கோமாளி சீசன் 3’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் கடினமாக உழைக்கக் கூடிய சாமானியர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில், இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் மக்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை நான் கோமாளி 2 சீசன்களில் நடித்து நம்மளை கவர்ந்த ராம் நிஷாந்த் தான் இந்த மூன்றாவது சீசனிலும் நடித்து இருக்கிறார். கேப் டிரைவர், பஸ் கண்டக்டர், மீனவர், போக்குவரத்து போலீஸ் அதிகாரி, எழுத்தாளர், தயாரிப்பாளர், மீம்ஸ் கிரியட்டர்ஸ் உள்ளிட்ட 10 துறைகளை சார்ந்து இந்த சீரிஸ் எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில்,  ஒவ்வொவொரு எபிசோட்களிலும் ஒரு ஒரு கதாபாத்திரத்தில் ராம் நிஷாந்த் நடித்து இருக்கிறார்.

இந்த வெப் தொடரின் டிரெய்லர் ஏற்கனவே, கடந்த மே மாதம் 1 ம் தேதி வெளியாகி மக்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், 10 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் தற்போது பிளாக் ஷீப் ( bsvalue) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது. இதற்கு  மக்களுக்கு மத்தியில் இருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

விமர்சனம்…

பெரிதாக கை தட்டி விசில் அடிக்கும் காட்சிகள் மற்றும் மாஸ் ஆக பேசும் வசனங்கள் காதல் காட்சிகள் இந்த சீரிஸ்ஸில் இடம்பெறவில்லை என்றாலும் கூட கண்டிப்பாக அனைவரும் பார்க்க கூடிய ஒரு நல்ல சீரிஸ் ஆக இயக்குனர் விசாகன் ஜெயகதிர் இயக்கி இருக்கிறார். மேற்கண்ட துறைகளில் இருப்பவர்களை நாம் எப்படி பார்ப்பது அவர்களின் வலி என்னவென்பதை போர் அடிக்காமல் நமக்கு எப்படி சொல்லலாமோ அந்த அளவுக்கு சிறப்பாக இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோன்ற வெப் சீரிஸ் இதற்கு முன்னதாக வந்து இருந்தாலும் கூட எமோஷனலான வசனங்கள் வைத்து எடுக்கப்பட்டு இருப்பதால் பலரும் பார்க்க விரும்புவது இல்லை. ஆனால், ‘நான் கோமாளி சீசன் 3’  வெப் சீரிசில் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை நம்மளுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மிகவும் எதார்த்தமாக காட்டி இருக்கிறார்கள்.

இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வர வித்தியாச வித்தியாச வேடங்களில் நடித்த ராம் நிஷாந்த் ஒரு பக்கம் காரணம் என்றால் மற்றோரு பக்கம் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் கூட சொல்லலாம். அவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு எதார்த்தமாக எப்படி நடிக்கவேண்டுமோ அப்படியே நடித்தும் இருக்கிறார்கள்.

அதைப்போல, அனைவராலும் கையாள முடியாத கதைக்களத்தை இயக்குனர் கையாண்ட விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரு நல்ல வெப் சீரிஸை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் கண்டிப்பாக யோசிக்காமல் இந்த வெப் சீரிஸ்-ஐ பார்க்கலாம்.

ட்ரைலர்….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்