ஜூன் 20-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி.!

சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றடைந்தார்.
அந்த வகையில், மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்றபின் ஜூன் 20ஆம் தேதி முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே, மக்களவை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பல முறை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில், பிரதமராக பதவியேற்ற பின்னர் தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தரவுள்ளார். அது ஏன் என்று பார்க்கையில், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைப்பதற்கு வருவதாக சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், ரயில்வே துறை சார்ந்த பல்வேறு பணிகளையும் அன்றைய தினம் தொடங்கி வைக்கிறார் என தகவல் வெளியகியுள்ளது. பின்னர், உடனடியாக டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சர்வதேச யோக தினத்தை கொண்டாட ஜூன் 21-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அங்கு ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி பகுதியில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.