சிறகடிக்க ஆசை இன்று ..முத்துவிடம் ரோகினி மாட்டிக்கொள்வாரா..?
சிறகடிக்க ஆசை– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின்[ஜூன் 14] இன்றைக்கான விறுவிறுப்பான கதையை இங்கே காணலாம்.
சத்யா சிட்டியிடம் இனிமேல் அக்கா மாமா விஷயத்தில் தலையிட வேண்டாம், இப்போ வரைக்கும் அவங்க அம்மாவோட பணத்தை திருடுனத மாமா வீட்ல சொல்லவே இல்ல ,அதனால இனிமே நம்ம வேலையை மட்டும் நம்ம பார்ப்போம் என சிட்டியிடம் சொல்லிவிட்டு காலேஜுக்கு செல்கிறார். சிட்டியும் இதை இப்படியே விடக்கூடாது அப்படின்னு நினைக்கிறாரு.
மனோஜின் ஷாப்பிற்கு தினேஷ் வந்துருகிறார் ;
இப்போ ரோகினி அவங்களோட ஷாப்புக்கு வராங்க அங்கே பார்த்தா தினேஷ் பூங்கொத்தோட நிக்கிறாரு. என்ன கல்யாணி உன்னோட வளர்ச்சியை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு அப்படின்னு சொல்றாரு .ரோகினிக்கு ஒரே அதிர்ச்சியா இருக்கு. அந்த பிஏ ரோகினிடம் மறுபடியும் எனக்கு பணம் தேவைப்படுது அதான் கல்யாணி உன்னை பார்க்க வந்தேன்னு சொல்றாரு.
எங்கிட்ட பணம் எல்லாம் இல்ல அப்படின்னு ரோகிணி சொல்றாங்க. பணம் இல்லாமையா இவ்வளவு பெரிய கடையை வாங்கி இருக்க அப்படினு தினேஷ் சொல்றாரு. அதற்கு ரோகினி இருந்த காசெல்லாம் போட்டு தான் கடை வாங்கி இருக்குன்னு சொல்றாங்க.
அப்போ நீ எனக்கு பணமா கொடுக்காம பொருளை குடு அப்படின்னு தினேஷ் கேக்குறாரு. ரோகினி சொல்றாங்க அதெல்லாம் முடியாது இப்போ மனோஜ் வந்துருவாரு நீ கெளம்பு அப்படின்னு சொல்றாங்க. இல்ல நான் போக மாட்டேன். உடனே ரோகிணியும் வேற வழி இல்லாம அவர் கேட்கிற பொருள் எல்லாம் கொடுக்கிறாங்க.
இப்போ மனோஜ் கடைக்கு வெளியில உள்ள பொருள் எல்லாம் பாத்துட்டு பரவாயில்லையே இன்னிக்கு வியாபாரம் நல்லா போய் இருக்குன்னு சந்தோஷப்பட்டு உள்ள போறாரு. ரோகினி கிட்டையும் சந்தோசமா கேக்குறாரு ,கேட்டுட்டு கல்லாவை பார்த்தா அங்கே பணம் இல்லை, என்ன ரோகினி இவ்வளவு சேல் ஆயிருக்கு பணமே இல்லை அப்படின்னு சொல்லவும் ரோகிணி சொல்றாங்க அவர் இஎம்ஐ ல தான் எடுத்திருக்கிறார்.
அதுக்காக கொஞ்சம் பணம் கூட நீ வாங்கலையா அப்படின்னு மனோஜ் கேக்குறாரு .ரோகினிக்கு உடனே கோவம் வந்து அங்கிருந்து கிளம்பி வித்யாவை பார்க்க போறாங்க. வித்யா கிட்ட போயி புலம்புறாங்க இனிமே இந்த தினேஷ சும்மா விடக்கூடாது ஏதாவது பண்ணனும்னு சொல்றாங்க.
வித்யாவும் சிட்டி கிட்ட கூட்டிட்டு போறாங்க. தினேஷ் ஓட போட்டோவ காட்டி இவரு எங்களை டார்ச்சர் பண்றாரு நாலு தட்டி தட்டி விடுங்க அப்படின்னு சொல்றாங்க. சிட்டியும் முதல்ல முடியாதுன்னு சொல்றாரு .அப்புறம் சரி உதவி தானே கேக்குறீங்க பண்றேன்னு சொல்லி ஒத்துக்கொள்கிறார்.
விஜயாவிற்கு ஸ்ருதி வைக்கும் சூடு ;
இப்போ ஸ்ருதியும் மீனாவும் கிச்சன்ல பேசிட்டு இருக்காங்க ஸ்ருதி இப்பதான் சொல்றாங்க .. நீங்க ரொம்ப சாஃப்ட் மீனா உங்கள மாதிரி நான் இல்ல, எங்கிட்ட யாராவது பிரச்சனை பண்ணா நான் சும்மா விடமாட்டேன் அப்படின்னு சொல்றாங்க.
உடனே மீனா அத்தை உங்ககிட்ட பிரச்சனை பண்ணுன என்ன பண்ணுவீங்க அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு அவங்க ஒரு சூடு வச்சு முகத்தில் எக்ஸ் மார்க் போட்டு விடுவேன்னு சொல்றாங்க .இதை வெளியில நின்னு விஜயா கேட்டுட்டு அதிர்ச்சியா இருகாங்க , இதை இப்படியே விடக்கூடாது நினைக்கிறாங்க.
உடனே கிச்சனுக்குள்ள போறாங்க ஸ்ருதியும் எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் கிளம்பிடுறாங்க. விஜயா மீனாவ திட்டுறாங்க என்ன சப்போர்ட்டுக்கு ஆள் சேக்குரிய அப்படின்னு கேக்குறாங்க.. உடனே அவங்களும் இல்ல அத்தை அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்றாங்க.
இப்போ சிட்டி அந்த தினேஷ வர வச்சு மிரட்டுறாரு . உடனே தினேஷும் இது ரோகிணி ஓட வேலை தானேனு புரிஞ்சிக்கிறாரு. அங்கிருந்து தப்பிச்சும் போறாரு. சிட்டியும் பின்னாடியே துரத்துறாரு அப்படி போறப்ப ஒரு பாட்டிய தினேஷ் இடிச்சு தள்ளிவிட்டுவிடுகிறார்.
அத செல்வமும் முத்துவும் பார்த்திடறாங்க ..செல்வத்தை அந்த பாட்டிகிட்ட இறக்கி விட்டுட்டு பாட்டிய பாத்துக்கோனு சொல்லிட்டு முத்து அவங்கள பாலோ பண்ணி போறாங்க. இதோட இன்னைக்கான எபிசோட் முடிந்தது. நாளைக்காவது ரோகிணி மாட்டி கொள்வரானு நாளைய எபிசோடில் காணலாம்.