பப்புவா அணியை பந்தாடிய ஆப்கானிஸ்தான்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Afghanistan vs Papua New Guinea

டி20I: இந்த ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் 29-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், பப்புவா நியூ கினி அணியும், பெர்னாண்டோ நகரில் உள்ள பிறையன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பப்புவா நியூ கினி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்களும், டோனி உரா 11 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்களையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பப்புவா நியூ கினி அணி 95 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்ததாக 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 11, இப்ராஹிம் சத்ரான் 0 ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த குல்பாடின் நைப் அதிரடியாக விளையாடினார்.

இவருடைய அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக குல்பாடின் நைப் 49*, முகமது நபி 16 * ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்