போச்சு போங்க ..!! இனி உங்க போன் நம்பருக்கும் துட்டு கட்டணும் ..பரிந்துரை செய்யும் டிராய்!!
டிராய்: நாம் இங்கிருந்து, இன்றொருவரை தொடர்பு கொள்வதற்கு ப்ரேதேயேக சிம்கார்டுகளுக்கு சந்தா கட்டுவது போல இனி நம் உரிமை கொண்டாடும் போன் நம்பருக்கும் பணம் செலுத்த வேண்டும் என டிராய், இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நாம் உபயோகித்து கொண்டிருக்கும் சிம் கார்டுகளை சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நமக்கு இலவசமாக வழங்கினாலும், அதற்கு மாத சந்தா, வருடாந்தர சந்தா என நம் தேவைக்கேற்ப போன் பேசுவதற்கும், இன்டர்நெட் உபயோகிப்பதற்கும் நாம் தான் பணம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.
இதன் மூலம் நம்மால் தற்போது மொபைல் இல்லாமலும், இன்டெர்நெட் இல்லாமலும் நம்மால் இயங்க முடியாத அளவிற்கு நம்மை நாம் பழக்கப்படுத்தி விட்டோம். இதனால் மாதமாதமோ அல்லது வருடந்தோறுமோ நாம் குறிப்பிட்ட பணத்தை இதற்காகவே எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டில் டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் (TRAI), நம் இந்திய அரசுக்கு பரிசீலித்து வருகிறது.
இதனால், இது அமலில் வந்தால் நாம் நமது மொபைல் எண்ணிற்கும், நம் தேவைக்கு ஏற்ப தற்போது பேசுவதற்கும், இன்டர்நெட்டுக்கும் பணம் கட்டுவது போல ஒரு பங்கு பணத்தை கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இது ஆரம்பத்தில் நமக்கு கசப்பாக இருந்தாலும் போக போக பழகி விடும் என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும், இது போன்ற எண்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.