கோலிக்கு பதிலாக பண்ட் விளையாடலாம்!! இந்திய முன்னாள் வீரர் கைஃப் பரிந்துரை!!
டி20I: இந்திய அணியில் விராட் கோலிக்கு இந்த டி20 உலகக்கோப்பை தொடர்நது கைகொடுக்காமலே இருந்து வருகிறது. இந்நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல வித பரிந்துரைகளை அவருக்கும் இந்திய அணிக்கும் கொடுத்து வருகின்றனர்.
20 ஓவர் உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரின் ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றியை பெற்றள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்று அசத்தி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி விளையாடிய 3 போட்டிகளிலும், 3 போட்டியிலும் தோல்வியே சந்தித்துள்ளார். முதல் போட்டியில் 1 ரன்களிலும், 2-வது போட்டியில் 4 ரன்களுக்கும் மற்றும் 3-வது போட்டியில் 0 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதனால், பல இந்திய அணியின் கிரிக்கெட் முன்னாள் வீரர்களும் அவரை 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கி விளையாடுமாறு பரிந்துரை செய்து வருகின்றனர். மேலும், 4-வது அல்லது 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கும் ரிஷப் பண்ட், தற்போது 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கி எதற்கும் சலித்தவர் என காண்பித்து உள்ளார்.
தற்போது, இதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் அவரது X தளத்தில் பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், “ஐபிஎல் தொடரை போல சீரான பிட்ச்கள் இங்கு இல்லை அதனால் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார்.
ஆனால் இங்கே அவர் அப்படி ஆக்ரோஷமாக விளையாட கூடாது, தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். அதனால், எப்போதும் போல விராட் கோலி 3-வது இடத்தில் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். மேலும், கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய சாதனைகள், புள்ளிவிவரங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.
அதனால் விராட் கோலி 3-வது இடத்தில் இறங்குவது அணிக்கும் நல்லது. அதே போல ரிஷப் பண்ட் 5-வது இடத்திலிருந்து, 3-வது இடத்தில் விளையாட முடியும் என்றால் அவரால் தொடக்க வீரராகவும் களமிறங்கி அசத்த முடியும்”, என்று கூறி இருந்தார்.
Pant with Rohit. Virat back to number 3. That’s my wish for the upcoming #T20WorldCup matches. pic.twitter.com/wsMxdNa2Ly
— Mohammad Kaif (@MohammadKaif) June 12, 2024