வெப்ப அலை எச்சரிக்கை! உ.பி., பீகார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..!
வெப்ப அலை : உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அலை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியா முழுவதும் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை படி படியாக உயரக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. ஜூன் 13 முதல் ஜூன் 16 வரை கிழக்கு மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்திலும், பீகாரில் ஜூன் 13 வரையிலும் வெப்ப அலை அதிகமாக வீசக்கூடும் என்பதால் ‘ரெட்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதைப்போலவே, ஜார்கண்ட் மாநிலத்திலும் இரண்டு நாட்களுக்கு அதாவது ஜூன் 13 முதல் ஜூன் 14 வரை வெப்ப நிலை அதிகமாகும் என்பதால் அங்கும் வெப்ப அலைக்கான ‘ரெட் அலர்ட் ‘ கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கங்கை மேற்கு வங்காளத்தில் கடுமையான வெப்பம் இருக்கும். டெல்லி, உத்தரகாண்ட், பஞ்சாப், சண்டிகர், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் சில நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.
அதைப்போலவே, ஒடிசா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்முவில் இன்றைய வெப்பநிலை அதிகமாக இருக்கும். மறுபுறம், வடமேற்கு ராஜஸ்தான், வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மத்தியப் பிரதேசம் ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
மேலும். தென்மேற்கு பருவமழை மேலும் பரவி, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 2-3 நாட்களுக்குள் ஆந்திராவின் கடலோரப் பிரதேசம், ஒடிசாவின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா வரை மழை நீடிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.