அமெரிக்காவுடனான போட்டியில் இந்தியாவின் மோசமான சாதனை! என்னானு தெரியுமா?
டி20I: டி20 உலகக்கோப்பையில் இந்தியா அணி, நேற்று விளையாடிய அமெரிக்கா அணியுடன் வெற்றி பெற்றாலும் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் இந்தியஅணி முதலிடத்தில் இருந்து வருவதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது சற்று தடுமாறினாலும், அதன் பின் துபேவும், சூரியகுமார் யாதவும் நிலைத்து விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்தியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அமெரிக்கா அணிக்கு எதிராக ஒரு மோசமான சாதனையை தற்போது இந்திய அணி படைத்துள்ளது. அது என்னவென்றால், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது முதல் 10 ஓவர்களில் கம்மியான ஸ்கோரை எடுத்தது தான்.
அதாவது, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஸ்கோர் செய்த முதல் 5 பட்டியலில் நேற்று அமெரிக்காவுடனான போட்டியில் அடித்த ஸ்கோரானது அந்த பட்டியலில் 4-ஆம் இடம் பிடித்துள்ளது. நேற்று அமெரிக்கா அணியுடனான போட்டியில் இந்திய அணி முதல் 10 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் எடுத்திருந்தது.
தற்போது, இந்த ஸ்கோர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது இந்திய அணியின் மோசமான சாதனையாகும். அதிலும் அமெரிக்கா போன்ற சிறிய அணிக்கு எதிராக இந்த ஸ்கோரை எடுத்து பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதற்கு இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஒரு காரணம் என்றால் நியூயார்க் மைதானமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பையில் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு இந்தியா அணியின் குறைந்த ஸ்கோர்கள் :
- 2016 – 42/6 vs நியூஸிலாந்து
- 2022 – 45/4 vs பாகிஸ்தான்
- 2010 – 47/6 vs ஆஸ்திரேலியா
- 2024* – 47/3 vs அமெரிக்கா
- 2021 – 48/3 vs நியூஸிலாந்து