3வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரானார் பெமா காண்டு!

Pema Khandu 3RD CM

அருணாசலப் பிரதேசம் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிழலில், மூன்றாவது முறையாக அம்மாநில முதல்வராக பெமா காண்டு, இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சரவையில் 11 உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

இடாநகரில் நடைபெற்ற உள்ள டிகே மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு மற்றும் 11 அமைச்சர்களுக்கும் அம்மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் ஜேபி நட்டா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச சட்டசபைக்கு மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 46 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, அம்மாநிலத்தில் 10 இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்