இந்த மைதானத்தில் விளையாடுவது கஷ்டம் தான் ..! தோல்வியை ஒப்புக்கொண்ட கேப்டன் ரோஹித் .!!

Rohit Sharma , Indian Captain

ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று இந்திய அணி, அமெரிக்கா அணியை வீழ்த்திய பிறகு ரோஹித் சர்மா அந்த போட்டியின் கருத்துக்களை பகிருத்திருந்தார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் அமெரிக்கா அணியை, இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்க அணி பேட்டிங் களமிறங்கி தட்டு தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து இலக்கை எட்ட பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி முதலில் சற்று சொதப்பினாலும், அதன் பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபேவின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. அதிலும் சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்து அசத்தியிருந்தார். இந்த போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா நடைபெற்ற போட்டியின் வெற்றியை குறித்தும் அந்த போட்டியின் சில கருத்துக்களை குறித்தும் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கஷ்டம் தான் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஷிவம் துபே மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த போட்டியில் விளையாடிய அமெரிக்க அணியை சேர்ந்த பல வீரர்களை நான் இந்தியாவில் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் சில போட்டிகளிலும் நான் விளையாடி இருக்கிறேன். நான் இந்தியாவில் பார்த்த வீரர்கள் இங்கு வந்து அமெரிக்கா அணிக்காக விளையாடுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.

அவர்கள் அனைவருமே கடினமான உழைப்பின் மூலம் தான் இங்கு வந்து விளையாடி வருகின்றனர். மேலும், இந்த மைதானத்தில் இங்கு வந்து விளையாடுவது என்பது எளிதான விஷயம் கிடையாது. இருப்பினும் நாங்கள் 3 வெற்றிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம்”, என கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today