நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு!

neet 2024

 நீட் தேர்வு : நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பலரும் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

மேலும்,  குறிப்பாக அண்மையில் பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே என்பவருடைய தரப்பில்  இருந்து உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பே விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை ஜூன் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு இந்த மனு வந்தது. அப்போது, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு, வருகின்ற ஜூன் 23-ஆம் தேதி மறு தேர்வு நடத்தவுள்ளதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்தது. தேசிய தேர்வு முகமையின் முடிவு குறித்து நீதிபதிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மேலும்,  நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், தற்போது நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய இயலாது என்றும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது, கலந்தாய்வை தொடர்ந்து நடத்தலாம் எனவும் உச்சநீதிமன்ற தகவலை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்