இதுக்கு பழைய கோலி தான் கரெக்ட் – விமர்சித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Sanjay Manjerekkar about Virat Kohli

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்:  டி20 உலகக்கோப்பை தொடரில் இது வரை நடைபெற்ற இந்திய அணியின் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி சரிவர விளையாடாததால் அவரை விமர்சித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசி இருக்கிறார்.

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்று விளையாடி வருகிறது. இது வரை இந்த 2 போட்டிகளிலும் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சொல்லும் படி எந்த ஸ்கோரையும் பதிவு செய்யவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் அதிக ரன்களை அடித்தவர் இந்த டி20 போட்டிகளில் சொதப்பி வருவதால் ரசிகர்கள் சற்று கவலையில் இருக்கின்றனர்.

தற்போது, இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஈஎஸ்பிஎன் ஸ்போர்ட்ஸ் இன்ஃபோவிடம் பேசிய (ESPN Info) அவர் விமர்சித்து கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, “விராட் கோலியிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது தான் தற்போது அவரது சரிவுக்கு காரணமாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறன்.

கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பல விமர்சனங்கள் இருந்து வந்தது. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அவர் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தனது சிறப்பான பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார். மேலும், கோலியின் ஸ்ட்ரைக் ரேட் தற்போது 150-ஐ தாண்டி சென்று இருக்கிறது.

இந்நிலையில், அதே மனநிலையில் தான் விராட் கோலி இந்த டி20 உலக கோப்பை தொடருக்கும் விளையாட வந்திருப்பார். ஆனால், பிரச்சனை என்னவென்றால் இங்கு இருக்கும் ஆடுகளம் மெதுவாக விளையாடினால் மட்டுமே ரன்கள் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனால், இது போன்ற மைதானத்திற்கு பழைய விராட் கோலி தான் திரும்பி வர வேண்டும். எனவே, யாராவது விராட் கோலியிடம் சென்று நீங்கள் பழைய விராட் கோலி போல் முதலில் மெதுவாக ஆடி பிறகு அதிரடி காட்டுங்கள் என்று சொல்ல வேண்டும்”, என கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்