போங்கடா நீங்களும் உங்க கிரிக்கெட்டும் ..! பேட்டை இரண்டாய் உடைத்த வங்கதேச வீரர் ..!

Jacker Ali

டி20I: நடைபெற்று டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியின் போது விளையாடி கொண்டிருந்த போது வங்கதேச அணி வீரரான ஜேக்கர் அலி தனது பேட்டை இரண்டு துண்டாக உடைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தட்டு தடுமாறி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை விரட்டி பிடிக்க பேட்டிங் செய்த வங்கதேச அணி விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் நல்ல தொடக்கத்தை அமைத்து விளையாடி கொண்டிருந்தது.

வங்கதேச அணி 10 ஓவர்களை கடந்ததும், விக்கெட்டுகளையும் இழந்து அதிக டாட் பந்துகளையும் விளையாடி தடுமாறினார்கள். இதனால், விறுவிறுப்பாக போட்டி நகர தொடங்கியது. இறுதி ஓவர் நெருங்கும் போது களத்தில் வங்கதேச அணியின் வீரர்களான முகமதுல்லாவும், ஜேக்கர் அலியும் விளையாடி கொண்டிருப்பார்கள்.

அப்போது, 7 பந்துக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை எதிர்கொண்ட ஜேக்கர் அலி பந்தை அடித்து விட்டு 2 ரன்கள் ஓடுவார். அந்த பந்தை பவுண்டரி அடிக்க முடியாத விரக்தியில் அவரது பேட்டை அவரது காலை உபயோகப்படுத்தி இரண்டு துண்டாக உடைத்துவிடுவார். அதன் பின் புதிய பேட்டை உபயோகப்படுத்தி விளையாடுவார்.

இந்த குறிப்பிட்ட வீடியோவானது கிரிக்கெட் ரசிகர்களிடேயே வைரலாகி பரவி வருவதோடு, இது போன்ற செயல்களால் தான் வங்கதேச அணி தோல்வியடைந்து கொண்டே இருக்கிறது என கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்