கனடாவில் இந்தியர் சுட்டு கொலை … அதிர்ச்சியில் இருந்து மீளாத குடும்பம் – 4 பேர் கைது.!

Canada Gun Shootout

கனடா: கனடாவில் உள்ள சர்ரே எனும் பகுதியில் இந்திய வம்சாவளி நபர் குடியிருப்பு அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2019 கனடாவுக்கு வந்தவர் தான் தான் 28 வயதான இந்தியரான யுவராஜ் கோயல். இவர் மிக சமீபத்தில் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றும் இருக்கிறார். இவர் கனடாவில் விற்பனை அதிகாரியாக (Sales Officer) பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த ஜூன்-7ம் தேதி பகல் சுமார் 8.45 மணிக்கு சர்ரே காவல்துறையினருக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த யுவராஜை மீட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், யுவராஜ் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர் என்றும் அவரது கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து 4 பேரை சந்தேகத்தின் அடிப்படியில் கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பத்திற்கு சற்று முன்பு தான் இந்தியாவில் இருக்கும் தாயாருடன் யுவராஜ் போனில் ஒரு நிமிடம் பேசியிருப்பார் என்றும், அதையடுத்து தான் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் அவரது குடும்பம் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal